Ads Top

வெண்டைக்காய் மோர் குழம்பு

 

In Tamil
Ingredients


    தயிர் -1 கப்
    வெண்டைக்காய்-100 கிராம்
    மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் -2
    எண்ணெய்-தேவையான அளவு
    கடுகு,உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
    கருவேப்பிலை -சிறிது
    சீரகம்-1 டீஸ்பூன்
    தேங்காய் -கால் மூடி
    பொட்டுக்கடலை -1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய் கடுகு,உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சீரகம்

Step 2
அரைக்க வேண்டிய பொருட்கள் : தேங்காய் பொட்டுக்கடலை

Step 3
முதலில் வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளவும்.பின்பு மஞ்சள் தூள்,தயிரையும் மிக்ஸ்சில் ஒரு அடி அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Step 4
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய் ,வெண்டைக்காயும் போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் அடித்து வைத்த தயிரை அதில் ஊற்றவும்.பின்பு அதில் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவையும் அதில் ஊற்றவும்.அத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி சிறிது இறக்கவும்.இதோ வெண்டைக்காய் மோர் குழம்பு தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். கூடவே கொஞ்சம் காரமான தொட்டுக்கையும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சூப்பர்.

No comments:

Powered by Blogger.