Ads Top

பெரியோர்களின் நகைச்சுவை

 

முருகனுக்கு அப்பாவான சிவாஜி

கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது சிவனின் அருமை பெருமைகளை கூறி வந்தார்.
திடீரென்று, ஒரு சிறுவனை பார்த்து, "முருகனின் அப்பா பெயர் என்ன?" என்று கேள்வி கேட்டார்.
அந்த சிறுவன் சற்றும் தயங்காமல், "சிவாஜி" என்று பதில் கூறினான்.
வாரியார் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமயத்திற்கு ஏற்றது போல், "பையன் கூறுவது சரி தான்" என்றார்.
இதைக்கேட்டு கூட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை புரிந்து கொண்ட வாரியார், "பெரியவர்களை நாம் காந்திஜி, நேருஜி என்று மரியாதையுடன் அழைப்பது இல்லையா? அது மாதிரி தான் அந்த பையன் சிவனை "சிவாஜி" என்று மரியாதையுடன் அழைத்து இருக்கிறான்" என்று கூறவும், கூட்டத்தினர் மீண்டும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.


சாக்ரடீஸின் வீடுகிரேக்க தத்துவ மேதை சாக்ரடீஸ், தாம் குடியிருப்பதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அது மிகவும் சிறியதாக இருந்தது. அவரைப் பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீஸிடம், ‘‘உலகம் புகழும் தத்துவ ஞானியான தாங்கள் இவ்வளவு சிறிய வீடு கட்டுகிறீர்களே, இது எப்படி போதும்?’’ என்று கேட்டார். ‘‘இந்தச் சிறிய வீட்டை நிரப்பும் அளவுக்காவது உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனது சந்தேகம்’’ என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவர் அதன் பிறகு பேசவே இல்லை!

No comments:

Powered by Blogger.