Ads Top

குழந்தைகள் தினத்திற்காக ஒரு குழந்தையின் கதை

 

ஒரு கோயிலின் உச்சியில் ஒரு புறாவும் அதன் குஞ்சும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது ..ஒருநாள் கோயிலில் திருவிழா வரவே வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..எனவே புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மாதாகோயிலின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்தது..

மாதா கோயிலிலும் திருவிழா வரவே அங்கேயும் வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..மீண்டும் அந்த புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மசூதியின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது..அந்த சமயத்தில் ஊருக்குள் மதக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது...ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாய்ந்தார்கள்..

அதைப் பார்த்துக்கொண்டிருந்த குஞ்சு புறா , தாய் புறாவிடம் கேட்டது ,
" ஏம்மா மனிதர்கள் ஒருத்தொருக்கொருத்தர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள்.."என்று.
அதற்கு தாய் புறா சொன்னது..." மனிதர்களுக்கு மதம் பிடித்துவிட்டது..அதனால்தான் அவர்கள் வெட்டிக்கொண்டு சாய்கிறார்கள் .."

" அப்படியானால் நமக்கு ஏன் மதம் பிடிப்பதில்லை..?" என்று குஞ்சு புறா கேட்டது..
உடனே தாய் புறாவும் ," நாமெல்லாம் பறவைகள் நமக்கு மதம் பிடிக்காது..அது மனிதர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.." என்றது..

மறுபடியும் குஞ்சு புறா , " அப்படியானால் மனிதர்களைவிட நாம் தானே உயர்ந்தவர்கள்.." என்று கேட்டது..
அதற்கு தாய் புறா சொன்னது, " அதிலென்ன சந்தேகம் அதனால்தான் நாம் மனிதர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் .." என்று.

No comments:

Powered by Blogger.