Ads Top

அட அப்படியா

 

” பத்து ரூவா கொடுத்துட்டு எதுவுமே வாங்காம போகுதே அந்தப் பெருசு. இன்னாடா விசயம்? ”

நடைபாதைக் கடை ஒன்றில், எதை எடுத்தாலும் பத்து ரூபா என்று விற்கும் சிறுவனிடம், பக்கத்துக் கடைக்காரன் கேட்டான்.

” அதுவா? இந்த சின்ன வயசுல வியாபாரம் பண்ண வந்துட்டியே. படிக்க வேண்டாமான்னு ஒரு தபா கேட்டாரு. படிச்சுக்கிட்டேதான் இதையும் பாத்துக்கறேன்னு சொன்னேன். அப்படியா? உன்னை நினைச்சா… ரொம்பப் பெருமையா இருக்கு. இந்தா.. பத்து ரூவா வச்சுக்கன்னு கொடுத்துட்டு எதுவும் வாங்காம போயிட்டாரு. அதுலேந்து எப்ப இந்தப்பக்கம் வந்தாலும் பத்து ரூவா கொடுப்பாரு. ஆனா எதுவும் வாங்காமயே போயிடுவாரு. ”

” அட அப்படியா? ரொம்ப நல்ல மனுசனா இருப்பாரு போல இருக்கே.. ”

” என்னாத்த நல்ல மனுசன்? ”

” ஏன்டா அலுத்துக்கறே? ”

” இப்ப எதை எடுத்தாலும் பதினைஞ்சு ரூவான்னுல்ல விக்கறேன். இப்பவும் அதே பத்து ரூவாய கொடுத்திட்டுப் போறாரு.. ”


No comments:

Powered by Blogger.