தவறான திசையில் தேடாதீர்கள்
ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார். காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.
சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார், கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
அதிஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு கட்சிப் பொருளல்ல மாறாக எ ம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், எங்களது தேடலின் அளவிற்கேற்ப அதனது கட்சியும்,பிரதி பலனும் அதிகரிக்கும்
No comments: