Ads Top

இந்த கணத்தில் இங்கே வாழு

இந்த கணத்தில் இங்கே வாழு. ஏனெனில் இதுதான் உண்மையான வாழ்க்கை. இப்போது இருப்பதுதான் நிஜம். நெறிமுறைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த கணமே நீ காலத்தின் உலகில் நுழைந்து விடுகிறாய், உண்மையான கணத்துடன் தொடர்பை இழந்து விடுகிறாய். நிகழ்காலத்தில் நிலை பெற்றிருத்தலை இழந்துவிடுகிறாய். அப்படித்தான் மனம் உருவாகிறது.

விட்டுக் கொடுத்து செல்வதற்க்கு பதிலாக நிலை கொள்ளுதலை, வேரை, தனித்தன்மையை கண்டுபிடி.

நிலைகொள்ளுதல் தகவல் அறிவுடன் சம்பந்தப்பட்டதல்ல, அது இருப்புடன் சம்பந்தப்பட்டது.

மௌனத்தில் மூழ்கு, அதை அனுபவி. அதன் சுவையை அதன் இனிமையை அற்புதமான நிலை பெறுதலை அனுபவி.

முதலில் ஒருவர் ஆழ்ந்த நிலை பெறுதலை பெற வேண்டும். வேருக்கு, அடி மையத்துக்கு வர வேண்டும்.

விழிப்புணர்வுக்கு அதற்கென பொருள் எதுவும் கிடையாது, அது உன் இருப்பில் நீ நிலை கொண்டிருத்தலே.

புத்தரின் நிலை பெறுதலின் முக்கியத்தன்மை ஆனந்தம்.

No comments:

Powered by Blogger.